திங்கள், 28 ஜனவரி, 2019

வட்ட கணக்குகள்



வட்ட கணக்குகள்

ஒவ்வொரு வட்ட அலுவலகத்திலும் பராமரிக்கப்பட வேண்டிய வட்ட கணக்குகளின் விவரம் வட்ட அலுவலக நடைமுறை நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை சீர்திருத்த குழு பரிந்துரையின் அடிப்படையில் சில வட்ட கணக்குகளை பராமரிப்பதிலிருந்து நீக்கம் செய்திடவும், தொடர்ந்து பராமரிக்க வேண்டிய வட்ட கணக்குகள் பற்றியும் அரசாணை எண்369 வருவாய் நிதி 4(2) துறை நாள்:6.7.2000ல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

(2)  நீக்கப்பட வேண்டிய வட்டக் கணக்குகளின் விபரம் (பரிந்துரை)


வட்ட கணக்கு எண்
தலைப்பு
நீக்கப்பட வேண்டியதன் காரணம்
(1)
(2)
(3)
பதிவேடு
“பி”
எஸ்டேட் மற்றும் இனாம்
தற்போது நடைமுறையில்  எஸ்டேட் மற்றும் இனாம் இல்லையென்பதால் இதனை நீக்கலாம்.
3.
சுல தானிய உணவுவகைகள் மற்றும் உப்பு ஆகியவற்றின் சில்லரை விலை குறித்த விவரம்.
வட்ட நுகர்பொருள் வழங்கள் பிரிவில் இக்கணக்கு பராமரிக்கப்படுவதால், இதனை நீக்கலாம்.
4.
நில  ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்களைக் காட்டும் கணக்கு
இவ்விவரங்கள் தற்சமயம் “டி”பதிவேட்டிலும் பதியப்பட்டு வந்து, இவ்வாளை வெளியிடும் நாள் முதல் தகுந்த முறையில் “ஏ” பதிவேட்டில் கொண்டு வந்து காண்பிக்கப்பட்டு கணினி மயமாக்கப்படுவதினால் இவ்விவரங்களை தனிக்கணக்காக பேணப்படாமல் கைவிடலாம்.
8.
கணக்கு எண்கள் 4,5 மற்றும் 6-ல் பதிவு செய்யப்பட்ட இனங்கள் தவிர்த்து உள்ள இதர அரசு மற்றும் இனாம் ஆயக்கட்டுகளின் மாற்றங்கள் குறித்த விவரம்.
இதன் விவரங்கள் கிராமப் பதிவேடு “ஏ”யின் இணைப்புகளில் உள்ளதால் இதனை நீக்கலாம். மாற்றங்கள் குறித்த விவரம்.
17ஏ.
நிரந்தரத் தீர்வு காணப்பட்ட உடமைகள் மற்றும் முழு இனாம் கிராமங்களின் கீழ் வரும் வருவாயின் வட்டி விகிதம் குறித்த விவரம்.
நிரந்தரத் தீர்வு காணப்பட்ட உடமைகள் மற்றும் முழு இனாம் கிராமங்கள் தற்போது நடைமுறையில் இல்லை என்பதால் இதனை நீக்கலாம்.
19.
ஆக்ரமணம் செய்யப்படாத (ருn-ழஉஉரிநைனடயனௌ) வருவாய் நிலை ஆணை எண்கள் 15,16,20,21 ஆகியவற்றின் கீழ் விற்பனை செய்யப்பட்ட நிலங்கள் பற்றிய கணக்கு.
தேவையில்லையெனக் கருதப்பட்டு நீக்கப்படுகிறது.
20.
சொத்துக்களின் மீது விதிக்கப்படும் நிலவரி (Land Cess)
குழுக்களின் பரிந்துரை ஏற்கப்பட்டு இக்கணக்கு நீக்கப்படுகிறது.
23.
பலவகை மதிப்புள்ள கைப்பற்றுகளின் மதிப்புகளைக் காட்டும் கணக்கு
இதன் விவரங்கள் கிராம “அ” பதிவேட்டில் காணப்படுவதால் இதனை நீக்கலாம்.
27.
சாகுபடி பயிர்களைப் பற்றிய குறுவட்டப் பதிவேடு. (Firka Register of  forecast of crops)
இதன் விவரங்கள், கிராமக் கணக்கு எண் 2-இல் பராமரிக்கப்படுவதால் இதனை நீக்கலாம்.
28.
சாகுபடி பயிர்கள் குறித்து வட்ட பதிவேடு (Taluk Register of forecast of crops)
இதன் விவரங்கள், கிராமக் கணக்கு எண் 2-இல் பராமரிக்கப்படுவதால் இதனை நீக்கலாம்.



(1)
 தொடரப்பட வேண்டிய வட்டக் கணக்குகளின் விவரம்

கணக்கு எண்
தலைப்பு

“அ” பதிவேடு
கிராமங்களின் எண்ணிக்கை, பெயர் மற்றும் விவரம். இக்கணக்கை பேணும் பொழுது ஜனத்தொகை பற்றிய புள்ளி விவரம் மற்றும் இதர முக்கிய விவரங்கள் இதில் பேணப்பட வேண்டும். மேலும் வெள்ளம் மற்றும் வறட்சியினால் பாதிக்கப்பட்ட கிராமங்களை முறையே சிகப்பு மற்றும் பிரவுன்(டீசழறn) குறியீடுகளால் குறித்து காண்பிக்கப்பட வேண்டும்.  

“சி” பதிவேடு
குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலங்களைப்பற்றிய பதிவேடு
இந்நான்கு சி.டி.எப். மற்றும் ஜி.பதிவேடுகளின் விவரங்கள் அனைத்தும் “ஏ” பதிவேட்டில் (அடங்கல்) காண்பிக்கும்படியாக பொருத்தமாக புகுத்தி பராமரிக்கப்பட வேண்டும். மேலும் இவ்விவரங்களுடன் அடங்கிய பதிவேடுகளை கணினி மயமாக்க வேண்டும் எனவே இந்த அனைத்துப்பதிவேடுகளையும் கணினி மயத்திலும் தொடரப்பட வேண்டும்.
“டி” பதிவேடு
தாழ்த்தப்பட்ட இன மக்கள் மற்றும் மற்றவர்களுக்கு நில ஒதுக்கீடு ((Assignment of Land)) செய்யப்பட்ட விவரங்களைக் காட்டும் பதிவேடு. 
“எப்” பதிவேடு
நிலஉரிமை (Land alienation) மாற்றம்  செய்யப்பட்ட நிலங்களின் விவரங்களைக் காட்டும் பதிவேடு.    
“ஜி” பதிவேடு
வாரிசுதாரர்கள் இல்லாததால் அரசால் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலங்களின் விவரங்களைக் காட்டும் பதிவேடு.
1.
சாகுபடி செய்யப்பட்ட நிலங்களின் விவரம் மற்றும் சில குறிப்பிட்ட முக்கியமான பயிர்களை விதைத்த மற்றும் மகசூல் விவரம் (Areas own and harvested of  certain important crops)
2.
பயிர்வாரியான நிலக்கணக்கு மற்றும் அப்புலங்களின் மகசூல் விவரம்.
இவ்விரு கணக்குகளின் விவரங்களை  கணக்கு எண் 1-இல் இரு கூடுதல் column ஆக கொண்டு வந்து கணக்க எண் 1ஆக பேண வேண்டும். இக்கணக்கை கணினி மயமாக்கவும்  வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்படுவது காரணமாக சில நில உரிமையாளர்கள்  அந்நிலங்களை உரிமை கொண்டாடாமல் விட்டுவிடுவதினால் அவர்களிடமிருந்து நிலவரி வசூலிப்பதிலிருந்து  விலக்கு அளிக்கும் பொருட்டு இத்தகைய நிலங்கள் பற்றிய விவரங்களை பராமரிப்பது அவசியம்.
2ஏ
பலவித இன நிலங்களின் நில அளவு காட்டும் கணக்கு (Area under different categories of land)
5.
கைவிடப்பட்ட நிலங்கள் பற்றிய விவரம்
6.
நிலமாற்றங்கள் குறித்த பதிவேடு

7.
அரசு மற்றும் மைனர் இனாம் நிலங்களில் உள்ள குறைபாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த நடப்பு பதிவேடு. 

8(ஏ)
புதிய நில அளவை நிலங்கள் மற்றும் உட்பிரிவுகள் குறித்த நடப்பு பதிவேடு

9.
ஓவ்வொரு கிராமத்திலும் நிலவரி தள்ளுபடி மற்றும் கழித்தல் விவரங்களைக் காட்டும் கணக்கு

10.
அரசிறைக் கழிவுகளைப் பற்றிய விவரங்கள்(Beriz deduction )
ஒருசில வட்டங்களில் “தஸ்திக் படி” போன்ற படிகள் வழங்கப்படுவதனால் இக்கணக்கை வட்ட அளவில் பேண வேண்டும்.
10ஏ
தண்ணீர் தீர்வை குறித்த பதிவேடு

12.
நிலவரித்திட்டம் அமுல் செய்யப்பட்ட ரயத்துவாரி கிராமங்களின்நிலவரி கணக்கு விவரம்.

13.
தோப்புக்காக ஒதுக்கப்பட்ட நிலம்
இத்தகைய நிலங்கள் மொத்தமாக எவ்வளவு உள்ளது என்கின்ற விவரங்களைச் சேகரித்து பின்பு தேவைப்படின் கணக்கை நீக்க இறுதி முடிவு எடுக்கலாம். அதுவரை இதனைப் பேணலாம்.
14.
ரயத்துவாரி கிராமங்களில் வசூலிக்கப்பட வேண்டிய விவரம்.

14(பி)
ரயத்துவாரி கிராமங்களில் வசூலிக்க முடியாத இனம் பற்றிய விவரம்.

14(சி)
மேற்குறிப்பிட்ட இனத்தில் (ரயத்துவாரி கிராம நிலவரி வசூல்) தீர்வைத் தொகைக்கு மேல் அதிகமாக செலுத்தப்பட்டிருக்கின்ற தொகையின்  விவரம்.
இந்த ஆறு கணக்குகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதினால், ஒரே கணக்காக இந்த ஆறு கணக்குகளில் சேகரிக்கப்படும் விவரங்கள் தெளிவாகக் காட்டும்படி, கணக்கு எண் 14 என ஒரே கணக்கில் பேணப்பட வேண்டும்.
14(டி)
ரயத்துவாரி கிராமங்களில் வசூலிக்க இயலாத  நிலுவை இனங்களை தள்ளுபடி செய்யப்பட்ட விவரம்.

16.
ஓவ்வொரு எஸ்டேட் அல்லது கிராமம் பற்றிய வசூல், நிலுவை மற்றும் கேட்பு விவரம். 

17.
ரயத்துவாரி கிராமங்களில் வசூலிக்கப்படாமல் நிலுவையாக உள்ள தொகையின் மீது வசூலிக்கப்பட வேண்டிய வட்டித் தொகையின் விவரம்.

15.
நிரந்தர தீர்வு காணப்பட்ட உடைமைகள் மற்றும் முழு இனாம் கிராமங்களில் வசூல் பற்றிய பதிவேடு.

18.
வருவாய் பாக்கிக்காக அரசால் வாங்கப்பட்டுள்ள நிலங்களின் விற்பனை விவரம்.  
இவ்விரு கணக்குகளை ஒரே கணக்காக இணைத்து பேண வேண்டும்.
18(ஏ)
வருவாய் பாக்கிக்காக விற்பனை மூலம் வாங்கப்பட்ட நிலங்களின் விற்பனை விவரங்களைக் காட்டும் பதிவேடு.    

21
கால்நடைகள் குறித்த விவரம் (கிராம கணக்கு எண் 21 போன்ற வட்ட அளவிலான அத்தகைய  புள்ளிவிபரங்களை காட்டும்படியான பொது விவரங்களுடைய வட்ட அளவில் பராமரிக்கக்கூடிய கணக்காக இருத்தல் வேண்டும்.தற்சமயம் இக்கணக்கில் கால்நடைகள்பற்றிய விவரங்கள்தான் சேகரிக்கப்படுகின்றது.ஆனால இக்கணக்கில் இனிமேல் மக்கள்ஜனத்தொகை, அவற்றில் ஜாதிவாரியான விவரம், மருத்துவ நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள், சத்துணவு மையங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற பொதுவான விவரங்களையும் அறிந்து கொள்ளும்படியாக கூடுதலான விவரங்களுடன்பேண வேண்டும்.

22.
பாசனத்திற்காக உண்மையில் பயன்படுத்தப்படுகின்ற கிணறுகள், குளங்கள்,கால்வாய்கள் மற்றும் இதர நீர்ப்பாசன திட்டங்கள் பற்றிய எண்ணிக்கை மற்றும் அதன் விவரம்.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மாவட்ட அலுவலக நடைமுறை நூல் (VOL.2)