செவ்வாய், 29 ஜனவரி, 2019

உயில், கொடை


உயில்

ஒருவர் தனது இறப்பிற்கு பிறகு தனது சொத்துக்களை யார் உரிமை கொண்டாடலாம் என்றோ, யாருக்கோ வழங்குகிறோம், அல்லது வழங்கவில்லை என்றோ சுயநினைவுடன் எழுதி வைப்பது உயிலாகும்.
யாருடைய பெயருக்கு எழுதலாம்?
உயில் மூலம் எழுதப்படும் சொத்தானது உயில் எழுதுபவரி வாரிசுகளுகளின் பெயரில் தான் எழுதி வைக்கப்பட வேண்டும் என்று அவசியம் இல்லை.
உயிலின் மூலம் உறவினர் பெயருக்கோ உறவினர் அல்லாதவர் பெயருக்கோ சொத்துக்களானது எழுதி வைக்கப்படலாம்.
எந்த சொத்தை உயிலாக எழுத முடியும்?
உயில் மூலம் வழங்கப்படும் சொத்தானது ஒருவரது பாத்தியப்பட்ட சுய சம்பாத்திய சொத்தாகவோ, பாரம்பரிய சொத்தாகவோ, கூட்டுக்குடும்ப சொத்தில் பாகப்பிரிவினை பெற்ற சொத்தாகவோ, தான செட்டில்மெண்ட் சொத்தாகவோ, கொடையாக பெற்ற சொத்தாகவோ, உயில் வாயிலாக பெற்ற சொத்தாகவோ இருக்கவேண்டும்.
உயில் பதிவு அவசியமா?
எழுதப்பட்ட உயிலை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை. இருப்பினும் உயில் ஒன்று எழுதப்பட்டால் பதிவு செய்வது நல்லது தானே?
உயிலில் யார் சாட்சி கையொப்பம் போடலாம்?
உயில் எழுதப்படும் போது உயில் எழுதுபவர் சுய நினைவுடன் இருக்க வேண்டும்,
மற்றவரின் தூண்டுதல் இன்றி கையொப்பமிட வேண்டும்,
மேலும் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் தான் உயில் எழுதுபவர் உயிலில் கையொப்பம் இட வேண்டும்.
உயில் மூலம் பயன் பெறுபவர் சாட்சி கையொப்பம் போட கூடாது.
உயில் திருத்தவோ ரத்து செய்யவோ முடியுமா?
ஒருவர் அவர் எழுதிய உயிலை எப்போது வேண்டுமானாலும் திருத்திக் கொள்ளலாம்,
ரத்து செய்யலாம்.
அதாவது ஒருவர் இரண்டாம் முறை உயில் எழுதினால் முதல் முறை எழுதிய உயில் தானாகவே இரத்தானதாகும்.
உயில் எழுதியர் உயில் சம்பந்தமான சொத்தை விற்க முடியுமா?
உயில் குறித்த சொத்தினை நிச்சயமாக விற்க முடியும்.
ஏனெனில் உயில் மூலம் வழங்கப்பட்ட சொத்திற்கு உயில் எழுதியவர் இறக்கும் வரை அவரே உரிமையாளர் ஆவார்.
எனவே எப்போது வேண்டுமானாலும் அந்த சொத்தினை அவர் விற்பனை செய்யலாம்,
அடைமானம் வைக்கலாம்.
உயில் எழுதியவர் இறக்கும் வரை அச்சொத்து குறித்து உயில் எழுதியவரை பயன் பெறுபவர் கேள்வி கேட்கவோ உரிமை கொண்டாடவோ முடியாது.
உயிலுக்கும் கொடைக்கும் என்ன வேறுபாடு?
கொடையாக ஒரு சொத்து வழங்கப்பட்டால் அதனை பெறுபவர் பெற மறுத்தாலொழிய அச்சொத்தின் மீது வழங்குபவருக்கு உரிமை இல்லை.
மாறாக உயிலில் மரணம் வரை உயில் எழுதுபவர் உரிமை கொண்டாடலாம்.
ஆனால் ரூ.100/- க்கு மேல் மதிப்பு கொண்ட சொத்தினை கொடையாக எழுதினால் அதனை பதிவு செய்வது கட்டாயம்.
உயில் எழுதாவிட்டால்?
உயிலை எழுதாமல் ஒருவர் இறப்பாரேயானால் அவருடைய சொத்துக்களை அவரது வார்சுகள் அனைவரும் சட்டம் கூறியுள்ள வகையில் பங்கிட்டு கொள்ளலாம் 

1 கருத்து:

  1. உயிலின்மூலம்.பயனடைவோரின் நெருங்கிய உறவினர் சாட்சி போடலாமா

    பதிலளிநீக்கு

மாவட்ட அலுவலக நடைமுறை நூல் (VOL.2)